தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்.., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி துவங்கிய 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து இன்று முதல் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கிய ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 4,57,525 பேர் மாணவர்கள், 4,52,498 மாணவிகள், மாற்றி பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் ஒன்பது லட்சத்து 10 ஆயிரம் பேர் எழுத உள்ளன.

காஸாவில் உடனடி போர் நிறுத்த தீர்மானத்திற்கு முதல் வெற்றி., ஐ.நா.அதிரடி நடவடிக்கை!!!

இது தவிர தனித் தேர்வார்களாக 28827 பேர் தேர்வினை எழுத உள்ளனர். இந்த தேர்வில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக 33 ஆயிரத்து 50 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவ, மாணவிகள் தேர்வு அறைக்குள் எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது என்றும், முறைகேடில் ஈடுபடும் மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here