கோவின் இணையத்தளத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு… மத்திய அரசுக்கு வலுக்கும் கண்டனம்!!!

0

கொரோனா தடுப்பூசி பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி புறணிக்கப்பட்டதற்கு மத்திய அரசின் பல தமிழக மக்கள் கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் இந்த கோவின் இணையதளம் செயல்படுகிறது. அப்படி இருக்க தமிழ் மொழி மட்டும் புறக்கணிக்கப்பட்டிருப்பது மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் பலரும் உடனடியாக தமிழ் மொழியை கோவின் தளத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை அறிந்துகொள்வதற்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள விவரங்களை அறிந்துகொள்வதற்கும் மத்திய அரசு சார்பில் கோவின்(cowin.gov) என்ற இணையதளம் தொடங்கப்பட்டது.  இந்த கோவின் இணையம் மற்றும் ஆப்பில் தொடக்கத்தில் பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மட்டுமே இருந்தது.

பின்னர் குஜராத்தி, அசாமி, தெலுங்கு, ஒடியா, மராத்தி, வங்காளம், கன்னடா, மலையாளம், பஞ்சாப்,  ஆகிய மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் தமிழ் மொழி இதில் இடம்பெறவில்லை. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here