“5G”க்கு எதிரான ஜூஹி சாவ்லா வழக்கு தள்ளுபடி…ரூ.20 லட்சம் அபராதம் …!

0

5ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவில் அமல்படுத்துவதற்கு எதிராக நடிகையும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லா தொடுத்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல் அவருக்கு 20 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ள நிலையில் புதிதாக 5ஜி அறிமுகமாக உள்ளது. இந்நிலையில் 5ஜி தொழில்நுட்பத்தால் உருவாகும் கதிர்வீச்சால் பூமியிலுள்ள பல்வேறு உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், கொரோனா  பரவலுக்கு 5ஜி தொழில்நுட்பம் காரணம் எனவும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் கருதப்படுகின்றன. இதையடுத்து நடிகை ஜூஹி சாவ்லா நாட்டில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய  கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி ஜே ஆர்.மிதா,அந்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் வெற்று விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது என்றும் தனது கண்டனத்தை தெரிவித்தார். மேலும் அபராதமாக  20 லட்ச ரூபாய்  விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனை ஏற்க மறுத்த ஜூஹி சாவ்லா தரப்பினர் அதை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் நீதிபதி மிதா அதனை நிராகரித்து “விஷயம் முடிந்துவிட்டது. உங்களிடம் சட்ட ரீதியான தீர்வுகள் உள்ளன. அதைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறி இந்த  வழக்கை  முடித்து வைத்தார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here