ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கலாம்.. ஆனால் இது மட்டும் கட்டாயம் – புது விதியை விதித்த தாலிபான்கள்!!

0
ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கலாம்.. ஆனால் இது மட்டும் கட்டாயம் - புது விதியை விதித்த தாலிபான்கள்!!
ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கலாம்.. ஆனால் இது மட்டும் கட்டாயம் - புது விதியை விதித்த தாலிபான்கள்!!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பல்வேறு புதிய விதிகளை விதித்து வரும் நிலையில் தற்போது பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மற்றும் மாணவியர் தனித்தனி வகுப்பறைகளில் படிக்க வேண்டும் என்ற புது கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் பிடித்ததன் பிறகு, அந்நாட்டு மக்கள் தாலிபான்களுக்கு பயந்து அஞ்சி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் வேறு தேசங்களுக்கு தங்கள் குடும்பத்துடன் அகதிகளாக செல்கின்றனர். இப்படி ஒரு அவல நிலையே ஆப்கானிஸ்தானில் தற்போது நிகழ்கிறது மேலும் காபூல் விமான நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு வேறு நிகழ்ந்ததால் 100 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கலாம்.. ஆனால் இது மட்டும் கட்டாயம் - புது விதியை விதித்த தாலிபான்கள்!!
ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கலாம்.. ஆனால் இது மட்டும் கட்டாயம் – புது விதியை விதித்த தாலிபான்கள்!!

இந்த குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றாலும் பல நாடுகளின் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் பல்கலைக்கழகங்களில் ஆண்களும், பெண்களும் ஒன்றாக படிக்க தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். மேலும் அவர்களின் சட்டப்படி மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு தனித்தனி வகுப்பறைகளில் பாடம் நடத்தப்படும் என அந்நாட்டின் கல்வித்துறையை கவனித்து வரும் சியார் கான் யாத் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here