ஒன்றரை வருடங்களுக்கு பிறகு விஜய்யின் மாஸ்டர் படம் செய்த புதிய சாதனை – ட்ரெண்டாக்கும் தளபதி ரசிகர்கள்!!

0
ஒன்றரை வருடங்களுக்கு பிறகு விஜய்யின் மாஸ்டர் படம் செய்த புதிய சாதனை - ட்ரெண்டாக்கும் தளபதி ரசிகர்கள்!!
ஒன்றரை வருடங்களுக்கு பிறகு விஜய்யின் மாஸ்டர் படம் செய்த புதிய சாதனை - ட்ரெண்டாக்கும் தளபதி ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலமாக திகழும் தளபதி விஜய்யின் படத்தின் பாடல் ஒன்று புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

தளபதி விஜய்

தற்போது தளபதியின் படங்கள் அனைத்துமே திரையுலகில் வெற்றி நடை போட்டு வருகிறது. அவர் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார் என்று தெரிந்தாலே போதும் படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து கொண்டே இருக்கும். 2020 ஆம் ஆண்டு லாக்டவுன் போடப்பட்ட போது அவர் நடித்திருந்த மாஸ்டர் படத்திற்கு எக்கச்சக்க வரவேற்பு இருந்தது. ஏனெனில் படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிவடைந்து இசை வெளியிட்டு விழா நடந்திருந்த நிலையில் லாக்டவுன் போடப்பட்டது.

தளபதி விஜய்
தளபதி விஜய்

அதுவும் விஜய் சேதுபதி முதன்முதலாக இந்த விஜய் படத்தில் இணைய இவர்களின் காம்போ எப்படி இருக்க போகிறது என்ற ஆர்வமும் ரசிகர்களுக்கு அதிகமாக இருந்தது. இந்நிலையில் தான் பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆனது. நினைத்ததை விட படம் அதிக கல்லா காட்டியது. எந்த முன்னணி நடிகர்கள் படமும் ஓடாத நிலையில் மாஸ்டர் படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்தது. அதற்கு முழு காரணமும் விஜய் சேதுபதி-விஜய் காம்போ தான். அதிலும் பாடல்கள் அனைத்துமே தெறிக்க விடப்பட்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

 விஜய்யின் மாஸ்டர் படம் செய்த புதிய சாதனை
விஜய்யின் மாஸ்டர் படம் செய்த புதிய சாதனை

இப்பொழுது எங்கு திரும்பினாலும் கேட்கும் முக்கிய பாடல்களில் வாத்தி கம்மிங் தான். இன்ஸ்டா ரீல்ஸ் என்றாலும் அது வாத்தி கம்மிங் தான். அந்த வகையில் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் யூடுயூப்பில் 250 மில்லியன் வியூஸை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த பாடல் வெளிவந்து ஒன்றரை வருடங்களில் 250 மில்லியன் வியூசை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here