T20 WC 2023: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி…, மந்தனாவின் நிலை தான் என்ன??

0
T20 WC 2023: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி..., மந்தனாவின் நிலை தான் என்ன??
T20 WC 2023: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி..., மந்தனாவின் நிலை தான் என்ன??

மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

T20 உலக கோப்பை:

தென் ஆப்பிரிக்காவில் மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடரின் 8 வது சீசன் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்குபெற்றுள்ள இந்த தொடரில் இந்திய அணி, குரூப் B யில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதில், இந்திய அணி இன்று உலக கோப்பையில் தனது முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கு முன் இந்த இரு அணிகளும் ஆசிய கோப்பையில் மோதின. இதில், இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்திய அணி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில், முத்தரப்பு தொடர் மற்றும் 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. இதில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தின் போது, இந்திய நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவுக்கு விரலில் காயம் ஏற்பட்டது.

இவரது காயத்தின் தன்மையை பொறுத்தே இன்று நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என தகவல் வெளியானது. மேலும், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கும் முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில், காயம் ஏற்பட்டிருந்தது. இவர்களில், ஹர்மன்பிரீத் கவுர் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், மந்தனாவின் நிலை கேள்வி குறியாகி உள்ளது. இதனால், இன்றைய போட்டியில், இவருக்கு தகுந்த மாற்று வீராங்கனையாக இருப்பார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here