கொரோனா பரிசோதனைக்கு உரிய கட்டணம் நிர்ணயம் – உச்சநீதிமன்றம் உத்தரவு..!

0
Indian-Supreme-Court

கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் கொரோனா பரிசோதனைக்கு ஏற்ற கட்டணத்தை நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டான முறையை அமல்படுத்த வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை

முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிகரும் ஆன அஸ்வினி குமார் கடந்த வாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக் செய்யவும்

corona treatment
corona treatment

அதில் கொரோனா நோயாளிகள் மோசமாக நடத்த படுவது வேதனை அளிப்பதாகவும் கண்ணியமான முறையில் இறப்பது ஒருவரின் அடிப்படையான உரிமை எனவும், இந்த விவகாரம் குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

உச்ச நீதி மன்றம்

அதனை தொடர்ந்து கொரோனா பாதித்த நோயாளிகள் சிகிச்சை மற்றும் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்கள் உடல்களை முறையாக கையாள்வது குறித்து உச்ச நீதி மன்றம் தாமாக முன்வந்த விசாரணைக்கு ஏற்ற வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் பூஷன், கொரோனா பரிசோதனைக்கு ஏற்புடைய கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும்.

court order
court order

மேலும் நாடு முழுவதும் ஒரே மாதியான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதனை தொடர்ந்து கொரோனா வார்டுகளுக்கு சி சி டி வி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் கொரோனா சிகிச்சை பெற்று உயிரிழந்தவர்கள் உடல்கள் உனடடியாக அங்கிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here