பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் மரணம்….,முதல்வர் இரங்கல்….,

0
பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் மரணம்....,முதல்வர் இரங்கல்....,
பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் மரணம்....,முதல்வர் இரங்கல்....,

சென்னையை அடுத்த மறைமலை நகர் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளம் புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் பலியாகியுள்ளார்.

கலைஞர் மரணம்

தமிழகத்தை சேர்ந்த ‘What A Karwad’ என்ற உணவு நிறுவனத்தின் இணை நிறுவனரும், பிரபல புகைப்பட கலைஞருமான ஸ்டாலின் ஜேக்கப் சென்னையை அடுத்த மறைமலை நகர் அருகே நடந்த சாலை விபத்தில் பலியான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அதாவது, இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு நோக்கி சென்ற ஸ்டாலின் ஜேக்கப் மற்றும் அவரது நண்பர் விஷ்ணு மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

‘ஜெயம் படத்தில் நான் நடிக்கவில்லை’…, நடிகர் ஜெயம்ரவி ஓபன் டாக்…..,

ஆனால், சிகிச்சை பலன் இன்றி அவர்கள் இருவரும் தற்போது உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் முக ஸ்டாலின், ‘நேற்று பிறந்தநாளை கொண்டாடிய கழகத்தின் துடிப்பான சமூக வலைதளவாதி ஸ்டாலின் ஜேக்கப் தனது இளம் வயதில் நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here