நாட்டில் நிலவும் உச்சகட்ட பதற்றம் – பிரதமர் வீட்டையே இரண்டாக்கிய பொது மக்கள்!!

0

இலங்கையில் போராட்டம் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் தற்போது அந்நாட்டு மக்கள், பிரதமர் வீட்டை சுற்றுலாத்தளம் போல மாறியுள்ளனர். அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

சுற்றுலா தளமான பிரதமர் வீடு:

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்தது. இந்நிலையில் மக்களின் கோபம் கொந்தளித்து உள்ள நிலையில் அவர்களை கட்டுப்படுத்த முடியாததால் அதிபர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத மக்கள் அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் நிலவும் உச்சகட்ட பதற்றம் – பிரதமர் வீட்டையே இரண்டாக்கிய பொது மக்கள்!!

இந்நிலையில் இலங்கை அதிபர் பதவியை கோத்தபயா ராஜபக்சே வரும் 13ம் தேதி ராஜினாமா செய்வார் என்ற தகவல் ஏற்கனவே வெளியான நிலையில் பிரதமர் அலுவலகம் இன்று அதை உறுதி செய்திருக்கிறது.இதனை தொடர்ந்து ரணில் விக்ரமசிங் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள் தற்போது தங்களது அந்த வீட்டை பொழுது போக்கு கூடமாக மாற்றியுள்ளனர். அதாவது அங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சேர்ந்து சமைத்து சாப்பிட்டும், மாளிகையை சுற்றி பார்த்தும் வருகின்றனர். அந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வெளியாகி உலக மக்கள் இடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here