
பார்டர் கவாஸ்கர் டிராபியின் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இந்தியாவின் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகி உள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர்:
பார்டர் கவாஸ்கர் டிராபியின் கடைசி டெஸ்ட் போட்டி, அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், சுப்மன் கில் (128), விராட் கோலி (186) மற்றும் அக்சார் பட்டேல் (79) என அதிரடியாக விளையாடி 9 விக்கெட் இழப்புக்கு 571 ரன்கள் எடுத்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
10 வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதுகு வலி காரணமாக அவர் களமிறங்கவில்லை. இதனால், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை விட 91 ரன்கள் முன்னிலை பெற்றது. முதுகு வலிக்கு உள்ளாகி உள்ள ஸ்ரேயாஸ் ஐயரை பிசிசிஐ மருத்துவ குழு கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்தியா…, ஹாட்ரிக் கோல் அடித்த ஹர்மன்பிரீத் சிங்!!
இதனால், இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இருந்தும் ஸ்ரேயாஸ் ஐயர் விலகி உள்ளார். பும்ராவை போல, இவருக்கும் முதுகு வலி பெரும் பிரச்சனையாக மாறுமா என கேள்விகள் எழுந்து வருகின்றன. இவர், தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இவர் எதிர்வரும் ஐபிஎல் தொடரை இழக்கவும் அதிக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.