ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்தியா…, ஹாட்ரிக் கோல் அடித்த ஹர்மன்பிரீத் சிங்!!

0
ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்தியா..., ஹாட்ரிக் கோல் அடித்த ஹர்மன்பிரீத் சிங்!!
ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்தியா..., ஹாட்ரிக் கோல் அடித்த ஹர்மன்பிரீத் சிங்!!

FIH ப்ரோ லீக் தொடரில், ஆஸ்திரேலிய அணியை 4-5 என்ற கோல் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி 2 வது இடத்தை பிடித்துள்ளது.

FIH ப்ரோ லீக்:

FIH ப்ரோ லீக் தொடரின் 4வது சீசன், இந்தியா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட 9 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, விளையாடியது. இதில், ஆஸ்திரேலியாவின் ஜோசுவா பெல்ட்ஸ் 3 வது நிமிடத்திலேயே கோல் ஒன்றை அடித்து அசத்தினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவின், ஹர்மன்பிரீத் சிங் 14 மற்றும் 15 வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்தார். இதனை தொடர்ந்து, இந்தியாவின் ஜுக்ராஜ் சிங் (18′) மற்றும் செல்வம் கார்த்தி (26′) நிமிடங்களில் கோல் அடிக்க, ஆஸ்திரேலிய வீரர் பதிலுக்கு ஒரு கோல் அடித்தார். இதன் மூலம், ஆட்டத்தின் முதல் பாதியில், இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது.

WPL: தொடர் வெற்றிகளை குவிக்கும் மும்பை இந்தியன்ஸ்…, எதிரணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்!!

இதையடுத்து தொடங்கப்பட்ட, 2வது பாதியில், வேகம் காட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள் 53 மற்றும் 57 வது நிமிடங்களில் இரு கோல்கள் அடித்தனர். இதற்கிடையில், இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் 56 வது நிமிடத்தில் கோல் அடிக்க, ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதனால், ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம், FIH ப்ரோ லீக்கில் இந்திய அணி விளையாடி உள்ள 6 போட்டிகளில் 4ல் வெற்றி, 1ல் டிரா மற்றும் 1ல் தோல்வி அடைந்து, 14 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here