அஷ்வினுக்கு ஷிவாங்கி கொடுத்த சர்ப்ரைஸ் – வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குபெறும் அஷ்வினுக்கு கோமாளியாக கலக்கி வரும் பாடகி ஷிவாங்கி சர்ப்ரைஸான பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

ஷிவாங்கியின் சர்ப்ரைஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபலமான நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் பிரபல போட்டியாளர் அஷ்வின். மாடலாக இருந்து தொலைக்காட்சி தொடர்களின் மூலம் பிரபலமாகி பல குறும்படங்களிலும் நடித்துள்ளார் அஷ்வின். தற்போது சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் அஷ்வின் வித்தியாசமான சமையல் புதுமைகளை செய்து மக்களை அசத்தி வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் சூப்பர் சிங்கர் ஷிவாங்கி அஷ்வினின் தீவிரமான ரசிகை. ஒவ்வொரு வாரமும் அஷ்வின் மற்றும் ஷிவாங்கி ஜோடியை ஒன்றாக பார்ப்பதே மக்கள் விருப்பமாக இருந்து வருகிறது. அதே போல அதிகமான வாரங்களில் இவர்கள் இருவரும் தான் பேர் ஆகியுள்ளனர். அஷ்வினுடன் ஷிவாங்கி செய்யும் குறும்புத்தனங்கள், அஷ்வினுக்காக ஷிவாங்கி பாடும் பாடல்கள் இதை பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

‘சசிகலா உடல்நிலை சீராக உள்ளது’ – மருத்துவமனை நிர்வாகம் தகவல்!!

தற்போது அஷ்வினின் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் கணக்கு தற்போது 1 மில்லியன் பின்தொடர்பவர்களை எட்டியுள்ளது. அதனால் அவருக்கு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நண்பர்கள் வாழ்த்துதலை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து ஷிவாங்கியும் தனது வாழ்த்துதலை தெரிவிக்க ஒரு கேக்கில் ‘happy 1 மில்லியன் followers குளுகுளு’ என்று எழுதி அவருக்கு அனுப்பியுள்ளார். இதற்கு ‘ so sweet of you thank you’ என்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் அனுப்பியுள்ளார் அஷ்வின். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here