பார்முலா1 கார்பந்தயம்…மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரேஸ் வெற்றி!!!

0

பார்முலா1 கார்பந்தயத்தின் ஆறாவது சுற்று நேற்று நடந்தது. இதில் மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரேஸ் வெற்றி பெற்றுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மொத்தம் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிற பார்முலா1 கார்பந்தயத்தின் ஆறாவது சுற்று நேற்று நடந்தது. 306.049 கிலோமீட்டர் இலக்கை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரேஸ் (ரெட்புல் அணி) 2 மணி 13 நிமிடம் 36.410 வினாடிகளில் இலக்கை அடைந்து வெற்றி பெற்று 25 புள்ளிகளை தட்டிச்சென்றார்.

இது இந்த பார்முலா1 கார்பந்தயத்தில் அவர் பெட்ரா இரண்டாவது வெற்றியாகும். அவரை விட 1.385 வினாடி பின்தங்கிய செபாஸ்டியன் வெட்டல் இரண்டாவது இடத்திலும், பியரே கேஸ்லி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.7 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தாலும் பிரேக் பிரச்சினையால் நேரம் விரயமானதால் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இதற்கு அடுத்த சுற்று அதாவது 7-வது சுற்று போட்டி பிரான்சில் வரும்  20 ஆம் தேதி நடக்கிறது. 6 சுற்றுக்களின் முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான வாய்ப்பில் வெர்ஸ்டப்பென் 105 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஹாமில்டன் 101 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், செர்ஜியோ பெரேஸ் 69 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here