Monday, June 21, 2021

விஜய்யின் பாடலுக்கு ரசிகரான சர்வதேச கிரிக்கெட் வீரர்…ஆப்கானிஸ்தானிலும் முணுமுணுக்க படும் ‘வாத்தி கம்மிங்’ பாடல்!!!

Must Read

நடிகர் விஜய்யின் படங்களுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் அவர் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் உள்ள ‘வாத்தி கமிங்’ பாடல்  ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷீத் கான், தனக்கு பிடித்த தமிழ் பாடல் என்று குறிப்பிட்டு உள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

விஜய் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டவர் அதுமட்டுமல்லாமல்  அவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் எப்போதும்  தோல்வி அடைந்தது இல்லை. மேலும் அவரது படங்கள் அனைத்து  தரப்பினரையும் ஈர்த்து தன் வசப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு அமைந்து இருக்கும். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் தற்போது ஐ.பி.எல்லில் ஹைதராபாத் அணிக்காக விளையாடுகிறார். கொரோனா காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் ரத்து  செய்யப்பட்டு உள்ளது.

எனவே வீரர்கள் அனைவரும் தத்தம் தங்கள் நாட்டிற்கு திரும்பி உள்ளனர். சமீபத்தில் ரஷீத் கான் இன்ஸ்டா மூலம் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் தங்களுக்கு பிடித்த தமிழ் பாடல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவர் ‘மை  ஆல் டைம் பேவரைட்  மாஸ்டர் படத்தில் இடம் பெற்று உள்ள ‘வாத்தி  கமிங் ‘ பாடல் தான்’ என்று கூறியுள்ளார். இதனை கேட்ட விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ‘வாத்தி  கமிங்’ பாடலுக்கு பல நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் நடனமாடிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

இவங்க தாங்க உண்மையான சிங்க பெண்… இந்தியாவின் பெண் போர் விமானியாக ஜம்மு & காஷ்மீரை சேர்ந்த பெண் தேர்வு!!

இந்தியாவின் ஜம்மு & காஷ்மீரை சேர்ந்த மௌவ்யா சூடான் என்பவர் 12வது பெண் போர் விமானியாக  இந்திய விமானப்படைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -