மீண்டும் சேலம் to சென்னை விமான சேவை – இன்று முதல் தொடக்கம்!!

0

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது சேலம்-சென்னை விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை தொடக்கம்:

கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக பரவி வந்த நிலையில் அதன் பரவும் விகிதத்தை குறைக்க அரசு சில கடுமையான முடிவுகளை எடுக்க முன்வந்தது. மக்கள் சமூக இடைவெளியுடன் இருப்பது மற்றும் முகக்கவசம் அணிவது என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவக்குழு பரிந்துரை செய்து வந்த நிலையில் அவைகளை மக்களுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. அடுத்தகட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் பொது இடங்களில் கூடுவது தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில் வெளிநாட்டு பயணிகள் நோய்த்தொற்றுடன் வந்துவிட கூடாது என்பதற்காகவும், பயணிகளின் நலனுக்காகவும் விமான சேவை நிறுத்தப்பட்டது. எனவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில் மக்கள் முடங்கி இருந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது நோய் தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில் சிறு சிறு தளர்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையின்படி முழு ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட சேலம்-சென்னை விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடக்கம் என கூறப்பட்டுள்ளது. எனவே மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதாக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here