40 ஆண்டுகளில் இல்லாத மாபெரும் பொருளாதார வீழ்ச்சி… -7.3% ஆக குறைந்த ஜிடிபி!!!

0

நடப்பாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (Gross Domestic Product) -7.3% ஆக பதிவாகியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இது போன்ற சரிவு ஏற்படவில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

2012-13 ஆம் நிதியாண்டில் இருந்து நிலையான வளர்ச்சி அடைந்து வந்த இந்தியப் பொருளாதாரம், ஜிஎஸ்டி வரி அமலாக்கம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதித்தது. இதனால் 8.2 சதவீதமாக இருந்த இந்திய பொருளாதாரம் -7.3 சதவீதமாக குறைந்துள்ளது.

அதே சமயம் இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷ் கடந்த சில ஆண்டுகளாகவே வர்த்தகம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் நிலையான வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் பங்களாதேஷ் நாட்டின் தனிநபர் வருமானம் ஒரு வருடத்தில் 9 சதவீதம் வளர்ச்சி அடைந்து 2,227 டாலராக உயர்ந்துள்ளது. ஆனால் இந்தியாவின் தனிநபர் வருமானம் 1,947.417 டாலராக உள்ளது.

டிசம்பர் 2016 முதல் ஜூன் 2020 வரையில் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில் இன்று வெளியான 2020-21 நிதியாண்டின் ஜிடிபி அளவிடு கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவில் கடும் சரிவை சந்தித்து -7.3 சதவீதமாக உள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here