இன்ச் பை இன்ச் ரசிகர்களை கதிகலங்க வைத்த ‘ஜகமே தந்திரம்’ ட்ரைலர் – பின்றியேப்பா தனுஷ்! பாராட்டி தள்ளிய ரசிகர்கள்!!

0

தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெகமே தந்திரம் படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு காத்திருந்த நிலையில் தற்போது ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றனர்.

ஜெகமே தந்திரம்:

தனது நடிப்பு திறமையால் நாளுக்கு நாள் ரசிகர் படையை அதிகரித்துக்கொண்டுள்ளார் தனுஷ். தற்போது தமிழில் ரொம்ப பிஸி ஆன நடிகராக தனுஷ் இருக்கிறார். தற்போது அவர் கையில் பல படங்கள் வைத்திருக்கிறார்.

தற்போது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் என்றால் அது ஜெகமே தந்திரம் திரைப்படம் தான். இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ நடித்துள்ள படம் ஜெகமே தந்திரம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

லண்டனில் நடக்கும் கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பாடலான ‘ரகிட ரகிட’ தான் தற்போது இளைஞர்களின் ரிங்க்டோன் ஆக இருந்து வருகிறது. இவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று படத்தின் ட்ரைலர் வெளியானது. இதனால் குஷி ஆன ரசிகர்கள் ட்ரைலரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here