ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி தயார் – 300 பேருக்கு பரிசோதனை!!

0

ரஷியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை 300 மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனையை 15ம் தேதி நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

ரஷியா கொரோனா தடுப்பூசி..!

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று 6 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில் ரஷியாவில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ரஷியா முதல் கட்ட பரிசோதை..!

இதுபற்றி ரஷிய வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி மையமான வெக்டரின் தலைவர் ரினாட் மக்ஸ்யுடோவ் கூறியதாவது,

கொரோனா வைரஸ் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனையை 15-ந் தேதி தொடங்கி விடலாம் என எதிர்பார்க்கிறோம். 300 தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும். இந்த தன்னார்வலர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். அவர்கள் எங்களது தேவைகளை நன்றாகவே பூர்த்தி செய்கிறார்கள்.

இந்த தடுப்பூசியின் முதல் கட்ட பரிசோதனைகள் செப்டம்பர் மாதம் முடிந்து விடும். அதன்பின்னர் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது நோய் எதிர்ப்பு திறன் கொண்டது என்பது நிரூபிக்கப்பட்டு விட்டால் அதன் பதிவு தொடங்கி விடும். மேலும் பிந்தைய காலகட்டத்தில் தன்னார்வலர்களின் ஆரோக்கியத்தை கண்காணிப்போம் என்பதை கவனித்தில் கொள்வோம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here