கேரளாவில் டெங்கு காய்ச்சல் பரவல் – மக்கள் அதிர்ச்சி..!

0

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அச்சத்திற்கு இடையே டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கேரளாவில் டெங்கு காய்ச்சல் பரவல்..!

தமிழகம் கேரளா எல்லைகளை இணைக்கும் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர்களால் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா நோய் தொற்றே இல்லாத மாவட்டமாக இடுக்கி மாவட்டம் இருந்த நிலையில் தற்போது 52 பேர் கொரோனவால் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கேரளா- தமிழக எல்லைகளை இணைக்கும் குமுளியில் மட்டும் 13 பேர் டெங்கு காய்ச்சலால் சிகிக்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இடுக்கி மாவட்ட மருத்துவ மற்றும் பொது சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இதுவே காரணம்..!

கேரளா மாநிலம் இடுக்கியில் தான் சுற்றுலா தளங்கள் அதிகமாக உள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாநில எல்லைகள் மற்றும் சுற்றுலா தளங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால மாவட்டம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து தங்கும் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் போன்றவை மூன்று மாதங்களாக திறக்காமல் இருக்கின்றன.

இவற்றில் இருக்கும் தண்ணீர் தொட்டிகள், நீச்சல் குளம் மற்றும் கால்வாய்கள் போன்றவை சுத்தம் செய்யாமல் இருப்பதால் தான் டெங்கு காய்ச்சல் பரவும் கொசுக்களுக்கு உற்பத்தி செய்யும் கொசுக்களின் இருப்பிடமாக உள்ளது. இதுவே டெங்கு காய்ச்சல் பரவ முதல் காரணமாக விளங்குகிறது. இந்நிலையில் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் போன்றவைகளை சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here