தமிழக மக்களுக்கு வீட்டு வசதி, தொழில் கடன் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு…, முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

0
தமிழக மக்களுக்கு வீட்டு வசதி, தொழில் கடன் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு..., முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் மிகப்பெரிய துயரத்திற்கு ஆளாகினர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதன் காரணமாக தமிழக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண உதவித்தொகை வழங்குவதாக தெரிவித்தனர். அதன்படி நேற்று முதல் அவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான பணி தொடங்கிவிட்டது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தென்மாவட்ட மக்களுக்கு மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு வசதி தொழில் கடன் ஆகியவற்றிற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று தூத்துக்குடி, திருநெல்வேலியில் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் மற்றும் பழுது பார்த்தலுக்கு ரூ.385 கோடி ஒதுக்கீடு. மேலும் சேதமான பயிர்களுக்கு நிவாரணமாக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here