13 பந்துகளில் அரை சதம்…..,அசால்டாக அடித்து ஆடிய ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால்…..,

0
13 பந்துகளில் அரை சதம்.....,அசால்டாக அடித்து ஆடிய ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால்.....,
13 பந்துகளில் அரை சதம்.....,அசால்டாக அடித்து ஆடிய ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால்.....,

நடப்பு IPL தொடரில் இந்திய அணிக்கு புதிதாக கிடைத்துள்ள ஒரு பொக்கிஷம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் யசஸ்வி ஜெய்ஸ்வால். உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் ரஞ்சி கோப்பை, 19 வயதினருக்கான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.

தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற IPL போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த யஸஸ்வி ஜெய்ஸ்வால் முதன் முறையாக T20 இல் அறிமுகமானார். அந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்திருந்தார் அவர்.

‘முன்னாள் காதலர்கள் இப்படித்தான்’….,நடிகை ப்ரியங்கா சோப்ரா உருக்கம்….,

இதையடுத்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் ராஜஸ்தான் அணியின் நிரந்தர வீரராக மாறிய யசஸ்வி ஜெய்ஸ்வால் இன்று (மே 11) கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 13 பந்துகளில் அரை சதத்தை பெற்றுள்ளார். அந்த வகையில் IPL வரலாற்றில் அதிவேக அரை சதத்தை அடித்த KL ராகுலின் சாதனையை முறியடித்துள்ளார் யசஸ்வி. தவிர, இன்று நடைபெற்ற போட்டியில் தனி ஆளாக நின்று 47 பந்துகளில் 98 ரன்களை விளாசி ராஜஸ்தான் அணியை வெற்றி பெறச்செய்துள்ளார் யசஸ்வி ஜெய்ஸ்வால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here