‘மகாபாரதம்’ படம் 10 பாகங்களாக வரும்…..,இயக்குனர் ராஜமௌலி கொடுத்த அப்டேட்…..,

0
'மகாபாரதம்' படம் 10 பாகங்களாக வரும்.....,இயக்குனர் ராஜமௌலி கொடுத்த அப்டேட்.....,
'மகாபாரதம்' படம் 10 பாகங்களாக வரும்.....,இயக்குனர் ராஜமௌலி கொடுத்த அப்டேட்.....,

தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராஜமௌலி. ‘ஸ்டுடென்ட் நம்பர் 1’ என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான இயக்குனர் ராஜமௌலி தனது பிரமாண்ட படைப்பான ‘பாகுபலி’ மூலம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார்.

அந்த வகையில் கடந்த 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படத்தின் 1 மற்றும் 2 ஆம் பாகம் பல கோடிகளைத் தாண்டி வசூல் அடைந்தது. அதே போல, ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘RRR’ திரைப்படமும் ஆஸ்கார் வரை சென்று பேசுபொருளானது. இந்த நிலையில், இயக்குனர் ராஜமௌலி தனது கனவு திரைப்படமான மகாபாரதம் குறித்த சில ஸ்வாரசியமான விவரங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

‘முன்னாள் காதலர்கள் இப்படித்தான்’….,நடிகை ப்ரியங்கா சோப்ரா உருக்கம்….,

அதாவது, ‘மகாபாரதம்’ கதை தொலைக்காட்சியில் 266 எபிசோடுகளாக ஒளிபரப்பானது. இந்த கதையை திரைப்படமாக எடுத்தால் எத்தனை பாகங்களாக எடுப்பீர்கள் என்று இயக்குனர் ராஜமௌலியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ‘மகாபாரதம் எனது நீண்ட நாள் கனவு படம். அந்த கதையை படமாக எடுத்தால் 10 பாகங்கள் வரை எடுக்க வேண்டியது வரும்’ என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here