மத்திய அரசு துறைகளில் 71,000 பேருக்கு பணி நியமன ஆணை., பிரதமர் மோடி பெருமிதம்!!!

0
மத்திய அரசு துறைகளில் 71,000 பேருக்கு பணி நியமன ஆணை., பிரதமர் மோடி பெருமிதம்!!!
மத்திய அரசு துறைகளில் 71,000 பேருக்கு பணி நியமன ஆணை., பிரதமர் மோடி பெருமிதம்!!!

நாடு முழுவதும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்க “ரோஜ்கார் மேளா” திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி உள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இத்திட்டத்தின் 5வது நிலையாக 71,000 பேருக்கு பணி நியமன நிகழ்ச்சி நேற்று 45 இடங்களில் நடைபெற்றது. பிரதமர் மோடி காணொலி மூலமாக அவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். இதன் பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி பெருமிதத்துடன் சில அறிவிப்புகளை தெரிவித்துள்ளார்.

அதுலயே நான் செத்துட்டேன்.., இதுல எப்படி..,வாய்ப்பே இல்ல., ஜெய் பீம் பட புகழ் மணிகண்டன் ஓபன் டாக்!!!

அதன்படி “அரசு துறைகளுக்கான போட்டித்தேர்வுகளில் எவ்வித இடைத்தரகர்களின் தலையீடு இல்லாத படி ஆன்லைனிலே விண்ணப்பம் முதல் தேர்வு முடிவுகள் வரை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் நாட்டில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டார்ட் அப் திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு கால வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் வளர்ச்சி பெற்று வருகிறது. மேலும் ஏழை எளியோர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ கல்லூரி, வீடு கட்ட மானியம் என பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.” என பேசி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here