குடியரசு தின விழா – கலை நிகழ்ச்சிகள் ரத்து!!

0

இன்னும் 4 நாட்களில் குடியரசு தினம் வரவுள்ளது. தற்போது கொரோனா வைரஸில் இருந்து முழுவதுமாக மீளாத நிலையில் இந்த ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழாவை நேரில் காண யாரும் வரவேண்டாம் என்று தமிழக அறிவித்துள்ளது.

குடியரசு தினவிழா:

வருகிற 26ம் தேதி அன்று 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. ஆண்டு தோறும் குடியரசு தின விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருவார்கள். சென்னை மெரினா கடற்கரையில் வைத்து தேசிய கோடியை ஏத்தி பள்ளி குழந்தைகள், பொதுமக்கள், மாணவர்கள், விடுதலை போராட்ட தியாகிகள் போன்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்பார்கள். மேலும் கலை நிகழ்ச்சிகள் நடத்த பட்டு சிறப்பாக கொண்டாடி வருவார்கள். தற்போது கொரோனா வைரஸின் தாக்கத்தால் பல நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கலை நிகழ்ச்சிகள் ரத்து:

அதே போல் வரும் 26ம் தேதி அன்று சென்னை மெரினா கடற்கரையில் தேசிய கோடியை ஏற்ற உள்ளார். எனவே அப்போது பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், விடுதலை போராட்ட வீரர்கள் என யாரும் அந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் கூறுகையில், கொரோனா தொற்று பரவலை குறைக்கும் வகையில்,மேலும் அனைவரின் பாதுகாப்பு நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம்.

அரசு மருத்துவக்கல்லூரியில் கூடுதல் கட்டணம் – கடலூரில் 45வது நாளாக மாணவர்கள் போராட்டம்!!

மேலும் குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளோம். அதுமட்டுமல்லாமல் வானொலியிலும் அதை பற்றி தகவல் தெரிவிக்க முடிவெடுத்துள்ளோம். அதனால் அனைவரும் தங்கள் வீட்டில் இருந்த படியே தொலைக்காட்சியில் கண்டும், வானொலி மூலம் கேட்டும் நிகழ்ச்சிகளை கழிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் விடுதலை போராட்ட வீரர்கள் அனைவருக்கும் தங்களது வீட்டிற்கு சென்றே பொன்னாடை போர்த்தி உரிய மரியாதையை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here