கிரிக்கெட் பந்து அளவிலான கருப்பு பூஞ்சை… 60 வயது நபரின் மூளையிலிருந்து அகற்றம்!!!

0

கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி பல உயிர்களை பறித்து வருகிறது. இந்நிலையில் தொற்று பாதித்தவர்கள் அதன் பிடியில் இருந்து மீண்டாலும் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கபடுகின்றனர். அந்த வகையில் பீகாரைச் சேர்ந்த 60 வயது நபர் ஒருவரின் மூளையில் இருந்து கிரிக்கெட் பந்து அளவிலான கருப்பு பூஞ்சை அகற்றப்பட்டு உள்ளது. இது மிகுந்த  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் தங்களின் பார்வையை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது நாட்டிற்கு  இன்னொரு சவாலாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை என அடுத்தடுத்து புதிய நோய்கள் கண்டறியப்பட்டு  வருகிறது. இருப்பினும்  கருப்பு பூஞ்சை மிகவும் ஆபத்தான ஒன்றாக உள்ளது.

இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த அனில் குமார்  என்பவர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் குணமடைந்து உள்ளார். அதன் பின் அவருக்கு சில நாட்களாகவே அடிக்கடி மயக்கம் ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால்  அவர் IGIMS மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது அவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு மூளையில் இருப்பது கண்டறியப்பட்டது.இந்நிலையில் மருத்துவர் மனிஷ் மண்டல், அனில் குமாருக்கு 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கிரிக்கெட் பந்து அளவிலான கருப்பு பூஞ்சையை அகற்றியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் மனிஷ் மண்டல் கூறுகையில்,பாதிக்கப்பட்ட நபருக்கு மூக்கின் வழியாக கருப்பு பூஞ்சை மூளைக்கு சென்றிருக்கிறது. நல்ல வேளையாக அவரின் கண்களுக்கு அது பரவவில்லை. இது போல பாதிக்கப்பட்ட பலருக்கும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டு அவர்களின் கண்கள் நீக்கப்பட்டது என்று மருத்துவர் கூறினார்.மேலும் அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த 60 வயது  நபரின் உடல் நிலையும் தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது வரை  நாடு முழுவதும் 31,216 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சிகிச்சை பலனின்றி 2109 பேர் உயிரிழந்திருப்பது. இந்நோய் மீதான அச்சத்தை அதிகரித்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here