‘உலகின் மிகப்பெரிய குடும்பத்தின்’ தலைவர் மரணம் – மிசோரத்தின் சுற்றுலா அடையாளம் என முதலமைச்சர் புகழஞ்சலி..!!!

0

உலகின் மிகப்பெரிய குடும்பம் என்று கருதப்படும் குடும்பத்தின் தலைவர் ஜினா சானா தமது 76ஆம் வயதில் உயிரிழந்துள்ளார் என்று மிசோராம் மாநில முதல்வர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய குடும்பத்தின்’ தலைவர் மரணம்:

வட கிழக்கு மாநிலமான மிசோரமின், பங்தங் டிலாங்நுயம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ஜியோனா சனா. 76 வயதான இவருக்கு 39 மனைவிகள், 89 குழந்தைகள். உலகின் மிகப்பெரிய குடும்பத்தை உடையவர் என்ற பெருமைக்குரியவர்.  மிசோராம் தலைநகர் ஐஸ்வாலில் உள்ள ட்ரினிட்டி மருத்துவமனையில் இன்று மதியம் 3 மணிக்கு அவர் இறந்ததாகவும், அவருக்கு நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் இருந்ததாகவும் என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது.

‘சானா பாவ்ல்’ எனும் கிறிஸ்தவ மதக்குழுவின் தலைவராக ஜியோனா இருந்துள்ளார் என்றும், அந்த மதக் குழுவைச் சேர்ந்தவர்கள் இவரை ‘ஹொடூபா’ (தலைவர்) என அழைப்பார்கள் என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியாகியுள்ள செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

மேலும்,இதுதொடர்பாக,மிசோரம் முதல்வர் சோரம் தங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: ”38 மனைவிகள் மற்றும் 89 குழந்தைகளுடன் உலகின் மிகப்பெரிய குடும்பத்திற்கு தலைமை தாங்குவதாக நம்பப்படும் திரு.சியோனா விடைபெற்றார். அவரது பெரிய குடும்பத்தின் காரணமாக மிசோரம் மற்றும் அவரது கிராமம் பக்தாங் தலாங்னுவம் மாநிலத்தில் ஒரு முக்கிய சுற்றுலா தளமாக மாறியுள்ளது. எனவே,உங்களுக்கு அமைதி கிடைக்கட்டும் ஐயா”,என்று பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here