டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு

0

இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் ஒரு நாள் போட்டியின் வீரர்களின் புதிய தர வரிசை பட்டியலை வெளியிட்டதாய் தொடர்ந்து டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில்.

டெஸ்ட் தரவரிசை:

இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் ஒரு நாள் போட்டியின் வீரர்களின் புதிய தர வரிசை பட்டியலை வெளியிட்டது. புதிய தர வரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 871 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்திருந்தார். அதனை தொடர்ந்து டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில். இந்த பட்டியலில் இதுவரை முதல் இடத்திலிருந்த இந்திய அணி இரண்டாம் இடத்திற்கு சரிந்த நிலையில் 2வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

22 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து நியூசிலாந்து வென்றுள்ளது. தொடர்ந்து 123 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியா (121) இரண்டாவது இடத்தையும், ஆஸ்திரேலியா (108) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here