இனி B.Ed படிப்பு 2 வருடங்கள் கிடையாது…, இந்திய மறுவாழ்வு கவுன்சில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! 

0

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இளங்கலை கல்வியியல் (B.Ed) படிப்பானது 2 வருடங்களாக நிர்ணயம் செய்யப்பட்டு கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த B.Ed படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள் கட்டாயம் 3 ஆண்டுகள் படிக்க வேண்டிய இளங்கலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதனால், ஆசிரியர் பணிக்கு தங்களை தகுதி வாய்ந்தவர்களாக மாற்றி கொள்ள மாணவர்கள் இளங்கலை பட்டம் (3) மற்றும் B.Ed (2) என 5 வருடங்கள் படிப்பை தொடர வேண்டிய நிலை உள்ளது.

இதனை மத்திய கல்வித்துறை அமைச்சகம் புதிய கல்விக் கொள்கையின் கீழ் 4 ஆண்டுகள் கற்றலை உடைய இளநிலை பட்டப் படிப்புடன் கூடிய B.Ed என்ற ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தை  மாற்றி அமைத்தது. ஆனாலும், சில கல்வி நிறுவனங்களில் 2 ஆண்டு B.Ed படிப்பையை தொடர்கின்றனர். இதனால், இந்திய மறுவாழ்வு கவுன்சில் (RCI) அடுத்த (2024-2025) கல்வி ஆண்டு முதல் 2 ஆண்டுகள் B.Ed படிப்புக்கு புதிய அனுமதிகளை வழங்க வேண்டாம் என்றும், 4 ஆண்டுகள் கொண்ட இளநிலை பட்டப் படிப்புடன் கூடிய B.Ed படிப்புக்கு தேசிய கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதால் இதனையை தொடர வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் நியமனம்.. வெளியான முக்கிய அப்டேட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here