மருத்துவ படிப்புக்கான நீட் CUT OFF பூஜ்ஜியமாக குறைப்பு.., தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு!!!

0
மருத்துவ படிப்புக்கான நீட் CUT OFF பூஜ்ஜியமாக குறைப்பு
நாடு முழுவதும் இப்போது மருத்துவ படிப்பை மேற்கொள்ள நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தகுதி தேர்வான நீட் தேர்வை எழுதி குறிப்பிட்ட கட் ஆப் மதிப்பெண்ணை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இப்போது தேசிய மருத்துவ ஆணையம் நீட் தேர்வு கட் ஆப் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் நாடு முழுவதும் காலியாக உள்ள 1000 உயர் சிறப்பு மருத்துவ பணியிடங்களை நிரப்ப தான் இப்போது கட் ஆப் மதிப்பெண்ணை குறைத்துள்ளனர். இதற்கு முன்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு முதுநிலை நீட் தேர்வு தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here