காதல் மனைவியுடன் விமானத்தில் ஹனிமூன் ட்ரிப் – இணையத்தில் வைரலாகும் ரவீந்தர் பதிவு!!

0
வேலைக்கும் அனுப்பி விட்டு மஹாலக்ஷ்மியை அசிங்கப்படுத்திய ரவீந்தர்.., அவரே வெளியிட்ட பதிவு!!
வேலைக்கும் அனுப்பி விட்டு மஹாலக்ஷ்மியை அசிங்கப்படுத்திய ரவீந்தர்.., அவரே வெளியிட்ட பதிவு!!

தயாரிப்பாளர் ரவீந்தர் தனது காதல் மனைவியான மகா லட்சுமியுடன் தனியார் ஜெட் விமானத்தில் பெலிஸில் உள்ள தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹனிமூன் பயணம்:

தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் தம்பதிகள் தான் ரவீந்தர்- மகாலட்சுமி. கடந்த செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சில பேர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும் பலரும் மோசமான கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்.

மேலும் எல்லா யூடியூப் சேனல்களிலும் பேட்டிகள் கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஜோடி ஜோடியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் ரவீந்தர் தனது காதல் மனைவி மகாலட்சுமிக்காக இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருக்கும் போஸ்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், “தயாரிப்பாளர் ரவீந்தர் தனது பொண்டாட்டியுடன் பெலிஸில் உள்ள தீவுக்கு தனியார் ஜெட் விமானத்தில் ஹனிமூன் பயணம்..அப்படி யாரும் இணையத்தில் போட்டுராதீங்கடா, நான் திருச்சியில் இருக்கும் என்னோட குலதெய்வ கோவிலுக்கு போறேன், இதை யாரும் கன்டென்ட் ஆக்கி எங்கள வச்சு செஞ்சிடாதீங்க” என்று வேடிக்கையாக பதிவிட்டுள்ளார். இதற்கு பல நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை வைத்து இணையத்தில் கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here