என்ன சொல்றீங்க!! மூன்று தொடர்களுக்கான பட்டியல் ரிலீஸ்.., ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமாருக்கு இடமில்லையா?

0
என்ன சொல்றீங்க!! மூன்று தொடர்களுக்கான பட்டியல் ரிலீஸ்.., ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமாருக்கு இடமில்லையா?
என்ன சொல்றீங்க!! மூன்று தொடர்களுக்கான பட்டியல் ரிலீஸ்.., ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமாருக்கு இடமில்லையா?

T20 உலக கோப்பை, ஆஸ்திரேலியா T20 தொடர், தென்னாப்பிரிக்கா T20 ஆகிய மூன்று தொடர்களில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை BCCI வெளியிட்டுள்ளது.

இந்திய அணி அறிவிப்பு:

இந்திய அணி தற்போது ஆசிய கோப்பை தொடரை முடித்த கையுடன் அடுத்ததாக T20 உலக கோப்பை தொடர், ஆஸ்திரேலியா T20 தொடர், தென் ஆப்பிரிக்கா T20 தொடர் ஆகிய மூன்று தொடர்களில் பங்கேற்க உள்ளனர். இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக கே.எல்.ராகுலும் வழிநடத்த உள்ளனர். இதில் ஹர்திக் பாண்டியா, புவனேஷ் குமார், அக்சர் படேல் ஆகியோர் T20 உலக கோப்பைக்கான அணியில் இடம் பிடித்துள்ளனர்.

ஆனால் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா T20 தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. இதற்கான காரணத்தை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதாவது இவர்கள் மூவரும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் போது உடல் தகுதி தொடர்பான வேலைகளுக்காக செல்ல உள்ளதால் இந்த இரு தொடர்களிலும் பங்கேற்க முடியவில்லை என BCCI தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே எல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங்.

ஆஸ்திரேலியா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே எல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது. ஷமி, ஹர்ஷல் பட்டேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.

தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே எல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது. ஷமி, ஹர்ஷல் பட்டேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here