ஜடேஜாவின் செயலை கிண்டல் செய்த ஆஸ்திரேலிய வீரர்…, பதிலடி கொடுத்த ரவி சாஸ்திரி!!

0

பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில், ஜடேஜாவின் செயல் குறித்து கிண்டல் செய்த, ஆஸ்திரேலிய வீரர் கருத்துக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் முன்னாள் ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார்.

IND vs AUS:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 177 ரன்களுக்குள் சுருண்டது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், நேற்று கே எல் ராகுல் 20 ரன்களில் வெளியேற, ரோஹித் சர்மா அரைசதம் கடந்திருந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

2ம் நாளான இன்று, பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில், அஸ்வின் (23), புஜாரா (7), விராட் கோலி (12), சூர்யகுமார் யாதவ் (8) ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினார். ஆனால், நிதானமாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 15 பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட 120 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். இவரை தொடர்ந்து, கே எஸ் பாரத் 8 ரன்களில் வெளியேற, ஜடேஜா (66*) மற்றும் அக்சர் படேல் (52*) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

T20 உலக கோப்பையில் மந்தனா விளையாடுவதில் சிக்கல்.., இந்திய அணியில் தொடரும் சோகம்!!

இதனால், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. இதற்கிடையில், இந்திய அணி பீல்டிங் செய்யும் போது, ஜடேஜாவின் விரலில் வலி நிவாரணியை தடவியது குறித்து, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் இதற்கு முன் இது போன்ற ஒன்றை பார்த்தது இல்லை என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரவி சாஸ்திரி அது வெறும் வலி நிவாரணி தான் அதே ஏன் இவ்வளவு பெரிய பேசு பொருளாக மாற்றி உள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here