
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சலுகை விலையில் உணவுப் பொருட்களை வழங்குவதற்காக 35,941 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 3,516 கடைகள் சொந்த கட்டிடங்களிலும், 24,179 கடைகள் பொது இடங்களிலும், மற்றவை வாடகை கட்டிடங்களிலும் செயல்படுகிறது. இதையடுத்து சென்னை கொத்தவால் சாவடியில் வஉ சிதம்பரனார் கூட்டுறவு பண்டகசாலைக்கு சொந்தமான புதிய ரேஷன் கடையை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று தொடங்கி வைத்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “ரேஷன் கடைகளில் நடக்கும் குளறுபடிகளை கண்டறிய எலக்ட்ரானிக் பாயிண்ட் ஆஃப் சேல் என்ற சாதனங்களை அரசு நிறுவ உள்ளது. மேலும் நுகர்வோர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைந்து பொருட்களை பெற்று செல்லும்படி தேவையான அனைத்து வசதிகளும் நவீன முறையில் ஏற்படுத்தப்பட உள்ளது.
75% வருகைப்பதிவு இருந்தால் தன பொதுத்தேர்வு எழுதமுடியும்.., முழுவிளக்கம் அளித்த அன்பில் மகேஷ்!!
மேலும் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி அனைத்து பொருட்களும் வழங்கும் விதத்தில் மினி சூப்பர் மார்க்கெட்டும் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதனால் ரேஷன் கடையில் 6,500 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் விரைவில் வழங்கப்பட உள்ளது.” என தெரிவித்துள்ளார்.