ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.. ரத்து செய்யப்படும் கார்டுகள் – இது தான் காரணமா?

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.. ரத்து செய்யப்படும் கார்டுகள் - இது தான் காரணமா?

இந்தியாவில் பல மாநிலங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்காக ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்கள் வாங்குவது குறித்த விதிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது.

புதிய விதிமுறைகள்:

அனைத்து மாநிலங்களிலும் வாழும் ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் அத்தியாவசிய உணவு பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதற்காக நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. ஏழை மக்களுக்காக  வழங்கப்படும் சலுகைகள் மற்றும் மத்திய அரசு வழங்கும் புது புது திட்டங்கள் ரேஷன் கார்டுகள் வாயிலாக மக்களை சென்றடைகிறது. சில நாட்களாக தகுதி வாய்ந்த பலருக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்று அடைவதில்லை என புகார்கள் எழுந்து வருகிறது.

இதனால் நியாய விலை கடையை நம்பி இருக்கும் அதிகமான மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். இந்த நிலவரத்தை முற்றிலும் தடுக்க பல முக்கிய புதிய விதிமுறைகள் வெளியாகி உள்ளது. அதாவது, ரேஷன் அட்டைதாரர்கள் தனது சொந்த வருமானத்தில் வாங்கிய நான்கு சக்கர வாகனம், 100 சதுர மீட்டர் பரப்பளவில் பிளாட் அல்லது வீடு, ஏசி, பிரிட்ஜ், துணி துவைக்கும் இயந்திரம் போன்றவற்றை வைத்திருந்தால் அரசு தரும் ரேஷன் திட்டத்தை பயன்படுத்தி கொள்ள முடியாது.

கடைசியா எப்போ இதை பண்ணீங்க – ஏடா கூட கேள்விக்கு எதார்த்த பதிலளித்த விஜய் தேவரகொண்டா!!

அதே போல நகரத்தில் குடும்ப வருமானம் மூன்று லட்சத்திற்கும் மேல் இருந்தாலோ அல்லது கிராமத்தில்  இரண்டு லட்சத்துக்கும் மேல் இருந்தாலோ அவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் குறித்த அறிவிப்பு தமிழக அரசு அல்லது மத்திய அரசு சார்பில் வெளி வராத போதிலும் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இது போன்ற நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here