குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ரேஷன் கார்டு இல்லாமலே பொருட்களை பெறும் முக்கிய அம்சம் அறிமுகம்!!

0

“ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தின் வாயிலாக பயனடையும் வெளி மாநிலத்தவர்களுக்காக “மேரா ரேஷன்” என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு, அது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

‘மேரா ரேஷன்’ செயலி:

இந்தியாவில் வசிக்கும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடையும் வகையில், ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வசிக்கும் பிற மாநிலத்தை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள், ஒரு கிலோ அரிசியை 3 ரூபாய்க்கும், ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும்  வாங்கிக் கொள்ளலாம் என அரசு தெரிவித்தது.

தற்போது இந்த பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள், ரேஷன் கார்டு இல்லை என்றாலும் “மேரா ரேஷன்” எனப்படும் மொபைல் ஆப் வழியாக, கைரேகை வைத்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. தற்போது இந்த ஆப் பற்றிய விவரங்களை, சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு விழிப்புணர்வு செய்யுமாறு, மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு உணவு துறை உத்தரவிட்டுள்ளது. மொபைல் போன்களில் ரேஷன் கார்டு எண் அல்லது ஆதார் எண்ணை பயன்படுத்தி இந்த செயலியை நுகர்வோர் உபயோகிக்கலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here