மாநிலத்தில் பள்ளிகள் மூடல்.. கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் – அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

0

ராஜஸ்தான் மாநிலத்தில், ஜனவரி 30ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மூடல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் அதிகரிப்பு :

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்துள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக தொற்று பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால், நேற்று புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை இரவு 11:00 மணி முதல் திங்கள்கிழமை காலை 5:00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போக, வருகிற ஜனவரி 30ம் தேதி வரை  அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக மட்டுமே படங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது கூட்டங்களில் 100 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் எனவும், இறுதி சடங்கில் 50 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 31ம் தேதிக்குள் மக்கள் அனைவரும் கண்டிப்பாக ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தி இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு, இல்லாதவர்களுக்கு பொது இடத்தில் அனுமதி கட்டாயம் மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள், மால்கள் அனைத்தும் இரவு 8 மணி வரை மட்டுமே, திறந்திருக்கும் எனவும், கோயில்கள் அனைத்தும் காலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி மட்டுமே திறக்க அனுமதி அளிப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும், வருகிற ஜனவரி 11ம் தேதி முதல் அமலுக்கு வரும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here