மீண்டும் விஜய் டிவியுடன் இணையவுள்ள ரோஷ்னி ஹரிப்ரியன் – நம்பர் 1 நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி!!

0

பட வாய்ப்பின் காரணமாக ரோஷ்னி ஹரிப்ரியன் சில மாதங்களுக்கு முன்பாக பாரதி கண்ணம்மா தொடரை விட்டு விலகினார். தற்போது ரோஷினி விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள குக் வித் கோமாளி சீசன் 3ல் கலந்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரோஷ்னி ஹரிப்ரியன்:

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா தொடர் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த தொடர் அதிக அளவுக்கு வெற்றியடைந்ததுக்கு ஒரு காரணம் ரோஷ்ணி ஹரிப்ரியனும் தான். ஆனால் இவர் படவாய்ப்பின் காரணமாக சீரியலை விட்டு விலகினார்.

மேலும் புதிய கண்ணம்மாவாக வினுஷா ஒப்பந்தமானார். ரோஷ்னி இந்த தொடரை விட்டு விலகியதில் இருந்து பாரதி கண்ணம்மா தொடர் பொலிவிழந்து காணப்பட்டது. தொடரை விட்டு சென்றாலும் விஜய் தொலைக்காட்சியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டே இருக்கிறார்.

தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக ரோஷ்னி தற்போது ஒளிபரப்பாகவுள்ள குக் வித் கோமாளி சீசன் 3யிலும் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை கேட்டதும் ரோஷ்னி ரசிகர்கள் தலை கால் புரியாமல் மகிழ்ச்சியில் அல்லாடி கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here