அரசு பள்ளியில் மதிய உணவு திட்டத்தால் வந்த சிக்கல்.., விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறை!!!

0
அரசு பள்ளியில் மதிய உணவு திட்டத்தால் வந்த சிக்கல்.., விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறை!!!
நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இப்போது காலை உணவு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் நரகொண்டனஹள்ளியில் உள்ள அரசு பள்ளியில் ஒரு சில மாணவர்கள் மதிய உணவை சாப்பிட மறுத்துள்ளனர். இதனால் குழந்தைகளுக்குள்ளே தகராறு ஏற்பட்ட நிலையில் அந்தப் பகுதி தலித் ஆர்வலர்கள் போலீசில் பள்ளியில் தாழ்த்தப்பட்ட தலித் பெண் சமைப்பதால் தான் மாணவர்கள் உணவு சாப்பிட மறுத்ததாக கம்ப்ளைன்ட் செய்துள்ளனர்.
இதனால் போலீசார்கள் பள்ளி அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில் மதிய உணவு திட்டத்தை 5 மாணவர்கள் தான் சாப்பிட மறுத்துவிட்டனர். அதற்கான காரணம் என்னவென்றால் அவர்களுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருப்பதால் தான் அவர்கள் சாப்பாடு வேண்டாம் என்று கூறியுள்ளனர்.  ஆனால் பள்ளியில் சாதி பாகுபாடு பார்க்க வில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here