தமிழகத்தில் அக்.16 முதல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் – உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!!

0

கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பல மாதங்களுக்கு மேலாக இயக்கப்படாமல் இருந்த ஆம்னி பேருந்துகள் நாளை முதல் (அக்.16) இயங்கும் என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் அவர்கள் அறிவித்து உள்ளார்.

ஆம்னி பேருந்துகள்:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பேருந்து பொதுப்போக்குவரத்துகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதன் காரணமாக தனியார் பேருந்து உரிமையாளர்கள், பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பின்பு செப்டம்பர் மாதம் நீட்டிக்கப்ட்ட ஊரடங்கில் அரசு சார்பில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. அதில் பேருந்து பொதுப்போக்குவரத்திற்கு அனுமதியும் ஒன்று. இதனால் அரசுப்பேருந்துகள் இயங்க தொடங்கிய நிலையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

அதாவது பேருந்துகள் இயங்காத 6 மாத காலத்திற்கான சாலை வரி ரத்து, 100 சதவீதம் பயணிகள் அனுமதி மற்றும் இன்சூரன்ஸ் நீட்டிப்பு என மூன்று வித கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அரசுப்பேருந்துகளும் குறைந்த அளவே இயக்கப்பட்டதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் தனியார் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்தது. இதை தொடர்ந்து அக்.16 முதல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு 9,627 கோடி கடன் பெற்றுக் கொள்ளலாம் – மத்திய அரசு அனுமதி!!

இதனால் 6 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆம்னி பேருந்துகள் நாளை முதல் இயங்க உள்ளன. மத்திய, மாநில அரசுகளின் கொரோனா விதிகளை பின்பற்றி பேருந்துகள் இயங்கும் என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர்க்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here