உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா- வில் உள்ள 4 ஸ்டேஜ்கள் – இதில் இந்தியாவின் தற்போதைய நிலை என்ன?

0

இன்றைய உலகில் உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்தும் ஒன்றாக கொரோனா வைரஸ் உள்ளது. சீனாவில் உருவாகி உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் ருத்ரதாணடவம் ஆடி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தொற்றால் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் மடிந்துகொண்டிருக்கிறார்கள். கொரோனா பரவுவதில் 4 ஸ்டேஜ் உள்ளது என்று பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

முதல்வகை அதாவது ஸ்டேஜ் 1

பொதுவாக ஒரு நோய் அல்லது வைரஸ் தொற்று பரவுகிறது என்றால் அது மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வகை ஆகும் அதாவது நோய் தொற்று தாக்கியவர்கள் நமது நாட்டிற்கு பரவ வாய்ப்புள்ளது.ஆகவே முதலில் மற்ற நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களை விமான நிலையத்திலிருந்தே முறையான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அப்படி எதாவது அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அலைத்து சென்று அவரை தனிமை படுத்தி முழு பரிசோதனை செய்வதன் மூலம் எது போன்ற வைரஸ் பரவலை தடுக்கலாம்.

இராண்டாம் வகை (ஸ்டேஜ் 2)


இந்த வகை பரவலானது வெளிநாட்டிலிருந்து நோய் தொற்றுடன் வந்தவர்கள் மூலம் அவர்களது உறவினர்கள் பாதிக்கப்படுவார்கள் . அந்த நபர் மூலம் வீட்டில் உள்ள அனைவரும் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாக வாய்ப்புள்ளது ஆகவே இதுபோன்ற வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் குறைந்தது ஒரு மாத காலம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தன்னை தாங்களாகவே தனிமை படுத்திக்கொள்வதன் மூலம் பெரும் நோய்த்தொற்று பரவலை தடுக்கலாம்.

மூன்றாம் வகை (ஸ்டேஜ் 3)


மூன்றாம் வகை மிகவும் அபாயகரமானது மற்றும் வேகமாக பரவக்கூடிய நிலை, இதில் நோய்த்தொற்று உள்ள ஒரு நபர் வழிபாட்டு தளங்கள், மால், அல்லது ஏதேனும் நிகழ்ச்சிக்கோ கலந்துகொண்டால் அங்கு இருந்த அனைவரும் அந்த நோய்தொற்று ஏற்பட பெரும்வாய்ப்பு உள்ளது.அதாவது யாரோ ஓருவர் மூலம் வைரஸ் தாக்கினால் அதுவே இந்த வகை ஸ்டேஜ். மேலும் இந்த வகை மிக வேகமாகவும் அதிகமாகவும் பரவக்கூடியது.

நான்காம் வகை (ஸ்டேஜ் 4)


சம்மந்தமே இல்லாத ஆட்கள் மூலம் நோய்தொற்று பரவுவதை இந்த நான்காம் வகைக்குள் அடக்கலாம். இதை எபிடமிக் அல்லது பேண்டமிக் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். சம்மந்தமே இல்லாத மூன்றாம் நபர் மூலம் பெருகிக்கொண்டே போகும் நிலை ஆகும். இந்த ஸ்டேஜில் தான் சீனா, இத்தாலி போன்ற நாடுகள் பல உயிர்களை பறிகொடுத்தது.நோய்த்தொற்று பரவலை அலட்சியமாக எண்ணி மக்கள் அதிகமாக ஒன்று கூடுனதே பல உயிர்களை காவு வாங்கியது. சரியான விழிப்புணர்வு இல்லாதது மற்றும் மக்களின் அலட்சியப்போக்கே இதற்கு காரணம்.

இந்தியாவின் நிலை.!


மூன்று வாரங்களாக இந்தியா இரண்டாம் நிலையில் இருந்தது ஆனால் இந்த இரண்டு நாட்களில் நோய்த்தொற்று பரவலின் அடிப்படையில் இந்தியா மூன்றாம் பரவலை நோக்கி நகர்கிறது என்றுதான் எண்ண வேண்டும். இந்த நிலை மேலும் தொடருமானால் வரும் வாரங்களில் இந்தியாவின் நிலை மிகவும் மோசமானதாக இருக்கும் என்று அச்சப்படவேண்டியுள்ளது.மேலும் இதுவரை இதற்கு மாற்றுமருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பலி எண்ணிக்கையை நினைத்து சற்று அஞ்சி இருக்கவேண்டியுள்ளது.


தனிமைப்படுத்திக்கொண்டால் நீண்டநாள் வாழ்வு என்பது இன்றைய பழமொழியாக உள்ளது”
ஆகவே மக்கள் அரசின் அயராத உழைப்பை நினைவில் கொண்டு மக்கள் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொள்வதே சிறந்த வழியாகும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here