டவ் ஷாம்பு பயன்படுத்துபவரா நீங்கள்.,, உங்களுக்கு தான் இந்த ஷாக் நியூஸ்!!

0
டவ் ஷாம்பு பயன்படுத்துபவரா நீங்கள்.,, உங்களுக்கு தான் இந்த ஷாக் நியூஸ்!!

தற்போதைய அவசர உலகில், தலைமுடி உதிர்வு பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது. இதை தடுக்க பலரும் பிராண்டடு ஷாம்புகளை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் டவ் ஷாம்புகள் அதிக அளவு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் FMCG நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் தயாரிப்பான டவ் உள்ளிட்ட ட்ரை ஷாம்பு வகைகள் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்வது நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் டவ் ஷாம்பு பயன்படுத்துவோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது யுனிலிவர் நிறுவனம் தயாரித்த டவ் உள்ளிட்ட ட்ரை ஷாம்பக்களில் உள்ள ரசாயனக் கலவையால் கேன்சர் ஏற்படும் ஆபத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் டவ் ஷாம்பூவை திரும்பப் பெற அதன் தயாரிப்பாளர்கள் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது தொடர்பாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையும் அனுப்பிய நோட்டிஸில், மார்க்கெட்டிலிருந்து திரும்பப் பெறப்பட்ட பொருட்களால் தற்போது வரை கஸ்டமர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை, இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். மேலும் டவ் ஷாம்பு பிராண்டுகளை Visual பண்ணுவதை கடைக்காரர்கள் நிறுத்துமாறு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(26.10.2022)-முழு விவரம் உள்ளே!

இந்நிலையில், அக்டோபர் 2021 வரை தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே யூனிலீவர் நிறுவனம் மார்க்கெட்டிலிருந்து இருந்து திரும்பப் பெற உள்ளன. மேலும் டவ் உள்ளிட்ட ட்ரை ஷாம்பு பொருட்கள் அனைத்தும் அமெரிக்காவில் மட்டும் தான் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுத்தம் இந்தியாவில் இல்லை என்றும், டவ் ஷாம்பு இந்தியாவில் தொடர்ந்து சேல்ஸ் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here