மூன்றாம் அலை பற்றி ஆலோசனை செய்வதை விடுத்து, அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுரை!!

0

கொரோனா மூன்றாம் அலை எப்போது வரும் என ஆலோசனை செய்வதை விட அதை வராமல் தடுக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்.

கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஓரளவுக்கு ஊரடங்கு, தடுப்பூசி பயன்பாடு ஆகியவற்றால் கட்டுக்குள் வந்திருக்கும் வேளையில் மக்களிடம் அடுத்த அலை பற்றிய பயம் தொற்றிக்கொண்டுள்ளது. கோவிட் தொற்றின் அலைகள் குறித்தும் அதன் உச்சம் குறித்தும் பல்வேறு கணிப்புகளை பல்வேறு அமைப்பினர் நடத்துகின்றனர்.

அதன்படி இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை ஆகஸ்ட் மாதம் தொடங்கும், அடுத்த ஆண்டு தொடங்கும் என்று ஒவ்வொரு நிபுணரும் தங்களது கணிப்பைக் கூறி வருகின்றனர். மேலும் மூன்றாம் அலை உருமாறிய டெல்டா பிளஸ் வைரசால் ஏற்படும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே கவலைக்குரிய விஷயம்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உலகமே மூன்றாம் அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. எனவே நாம் மூன்றாம் அலை எப்போது வரும் என ஆலோசனை செய்வதை விடுத்து அதை வராமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here