பிரதமரின் அமெரிக்க பயணம் – Quad மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தகவல்!!

0

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதாகவும், அங்கு நடைபெறும் குவாட் மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

மோடியின் அமெரிக்க பயணம்:

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்த பிரதமர் நரேந்திர மோடி தற்போது அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வந்துள்ளது.  இதற்காக, வருகின்ற செப்டம்பர் 22ஆம் தேதி  தனி விமானம் மூலம் பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதாகவும், அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 23ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வந்துள்ளது.

பைடனின் பதவி ஏற்புக்கு பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு என்பதால் இதில் பல முக்கிய கலந்துரையாடல் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தும் பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 25 ஆம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.  இதனை பிரதமரின் வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது மட்டுமல்லாமல், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா  மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் Quad  மாநாடு வாஷிங்டனில் நடக்கவுள்ளது.  இந்த மாநாட்டில், பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக  தகவல் வந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பின் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here