பாட்னா பைரேட்ஸிடம் வீழ்ந்த தமிழ் தலைவாஸ்…, புள்ளிப்பட்டியலில் திடீர் சரிவு!!

0
பாட்னா பைரேட்ஸிடம் வீழ்ந்த தமிழ் தலைவாஸ்…, புள்ளிப்பட்டியலில் திடீர் சரிவு!!
பெங்களூரு, புனே மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் மூன்று கட்டமாக புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசன் நடைபெற்று வருகின்றது. இந்த வகையில் நேற்று (டிசம்பர் 22), தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக, பாட்னா பைரேட்ஸ் போட்டியிட்டது. இதில், பாட்னாவின் சுதாகர் மற்றும் மன்ஜீத் அதிரடியாக செயல்பட்டு, புள்ளி எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கினர்.
இதனால், தமிழ் தலைவாஸ் அணி 33-46 என்ற புள்ளி வித்தியாசத்தில் பாட்னா பைரேட்ஸிடம் தோல்வியை தழுவியது. இதன் விளைவால் பட்டியலில் தமிழ் தலைவாஸ்11வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், தெலுங்கு டைட்டன்ஸ் 37-36 என்ற புள்ளி வித்தியாசத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here