Home சீரியல் நாங்களே வீட்டை விட்டு வெளியே போறோம்.., முத்து-மீனா எடுத்த அதிரடி முடிவு.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

நாங்களே வீட்டை விட்டு வெளியே போறோம்.., முத்து-மீனா எடுத்த அதிரடி முடிவு.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

0
நாங்களே வீட்டை விட்டு வெளியே போறோம்.., முத்து-மீனா எடுத்த அதிரடி முடிவு.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!
சிறகடிக்க ஆசை சீரியல் இப்போது எதிர்பாரா பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. விஜயா அண்ணாமலையிடம் முத்து, மீனா இந்த வீட்ல இருந்தா தினமும் பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். அதனால் அவர்களை தனி குடுத்தனம் வைத்து விடலாம் என்று சொல்கிறார். இதை கேட்டு அண்ணாமலை எதுனாலும் யோசித்து முடிவு எடுப்போம் என்று சொல்ல விஜயா ஒரு நல்ல முடிவா எடுங்க என்கிறார். இப்படி இருக்கையில் இந்த விஷயம் முத்துவுக்கு தெரிந்து விடுமாம்.
இதனால் ஆத்திரம் அடைந்த முத்து விஜயாவிடம் எங்கள எப்படி வீட்டை விட்டு வெளியே போக சொல்லலாம் என சண்டை போடுவாராம். பின் அதற்கு விஜயா நீ தினமும் காட்டுமிராண்டித்தனமா நடந்துக்கிட்டா அந்த மருமகள் என்ன நினைக்க மாட்டாங்க என்று சொல்லுவாராம். நான் பேசுறது உங்களுக்கு அசிங்கமா இருக்கு. ஆனா நீங்க பண்ற எதுவுமே உங்களுக்கு தப்பா தெரியலையா என்று கேட்க விஜயா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருப்பாராம். கடைசியில் முத்து நீங்க சொல்லி நாங்க வீட்டை விட்டு போகணும்னு எங்களுக்கு எந்த அவசியமும் கிடையாது. நாங்களே வீட்டை விட்டு வெளியே போறோம் என்று சொல்லி விடுவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here