உங்கள் UAN நம்பர் தொலைந்து விட்டதா? இனி ஈஸியா உங்க PF பேலன்ஸ் செக் பண்ண இத மட்டும் பண்ணுங்க!!

0

உங்கள் பிஎப் கணக்கின் UAN நம்பர்  தொலைந்து விட்டால் கீழ்காணும் வழிமுறைகளை வைத்து அந்த நம்பர் இல்லாமல் உங்கள் பேலன்ஸை சுயமாகவே நீங்கள் பார்த்து கொள்ளலாம்.

பேலன்ஸ் பார்க்கும் வழிமுறைகள்:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சார்பாக தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு தொகை மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும்.  இந்த கணக்கை மெயின்டைன் செய்வதற்காக ஊழியர்களுக்கு 12 இலக்க யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் எனப்படும் UAN எண் வழங்கப்படுகிறது.  இந்த நம்பர் தொலைந்து விட்டால் பேலன்ஸ் பார்ப்பது கஷ்டம் என்ற எண்ணத்தை இனி விட்டொழியுங்கள். இந்த எண் இல்லாமலே கீழ்காணும் வழிமுறைகளை வைத்து உங்கள் PF பேலன்ஸை சுயமாகவே நீங்கள் பார்த்து கொள்ளலாம்.

  • முதலில் https://www.epfindia.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று, click here to know your PF balance என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
  • பிறகு, ஓபனாகும் புதிய பக்கத்தில் உங்களது மாநிலம், பிஎஃப் அலுவலகம், code நம்பர், பிஎஃப் அக்கவுண்ட் நம்பர், பெயர், மொபைல் நம்பர் போன்ற தகவல்களை நிரப்பவும்.
  • பின்னர், உங்கள் முன் வரும் திரையில் I agree என உள்ளதை கொடுத்தால் உங்களது பிஎஃப் பேலன்ஸ் விவரங்களை நீங்கள் பார்க்க முடியும்.
  • உங்களுக்கு உங்கள் UAN நம்பர் தெரிந்தால் பிஎப் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து ‘EPFOHO UAN’ என டைப் செய்து 7738299899 என்ற நம்பருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் உங்கள் பேலன்ஸ் பார்க்கலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here