பிரசவ வலியில் துடிக்கும் தனம் – கடைசி நேரத்தில் வந்து காப்பாற்றும் கண்ணன்! கண்கலங்க வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏற்கனவே விறுவிறுப்பான சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தனத்திற்கு பிரசவ வலி ஏற்படுகிறது. அந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் எதிர் வீட்டிற்கு குடி வந்ததில் இருந்தே ஐஸ்வர்யா அனைவரையும் வம்புக்கு இழுத்து கொண்டே தான் உள்ளார். இன்றைய எபிசோடில் கூட கண்ணனுக்கு குழம்பு கேட்டு வீட்டிற்கு முன்னாள் சென்று நிற்க இதனால் கோவமடையும் தனம் திட்டி அனுப்பி விட்டார்.

இந்நிலையில் தான் தற்போது புதிய ப்ரோமோ வைரலாகி வருகிறது. இத்தனை நாட்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த காட்சிகள் யாவும் இனி வரும் எபிசோடுகளில் அரங்கேற போகிறது. அதாவது வீட்டில் உட்கார்ந்திருக்கும் தனத்திற்கு திடீரென பிரசவ வலி ஏற்படுகிறது.

தனத்தின் அம்மா என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்து கொண்டிருக்க மூர்த்தி ஜீவா யாருமே போனை எடுக்கவில்லை. வெளியில் வந்து அலைமோதும் தனத்தின் அம்மா கண்ணனை உதவிக்கு கூப்பிட அடித்து பிடித்து ஓடி வருகிறார். வேகமாக சென்று ஆட்டோவை பிடித்து வருகிறார்.

‘குழம்பு கேட்குற சாக்குல குடும்பத்தோட ஒட்டிக்கலாம்னு பிளான் போடுறியா’ – ஐஸ்வர்யாவை அசிங்கப்படுத்தி அனுப்பும் தனம்!!

அண்ணியை கையில் ஏந்திக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். தனத்திற்கு நல்லபடியாக குழந்தை பிறக்குமா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here