தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டம்?? உச்சநீதிமன்றத்திற்கு பதில் மனு!!

0
தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டம்?? உச்சநீதிமன்றத்திற்கு பதில் மனு!!
தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டம்?? உச்சநீதிமன்றத்திற்கு பதில் மனு!!

பல மதங்களை கொண்ட மதச்சார்பற்ற நாடாக இந்தியா திகழ்கிறது. இதனால், ஒருவர் தங்களுக்கு விரும்பியப்படி, பல்வேறு மத வழிப்பாடுகளையும் செய்து வருகின்றனர். இதற்கிடையில், அனைத்து மாநிலங்களிலும் கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக வலுவான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா மனுத் தாக்கல் செய்திருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த வழக்கானது, நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்கு தமிழ்நாடு தரப்பில் இருந்து, பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதில் மனுவில், கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான இந்த விவகாரத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்வது தமிழ் நாடாக தான் இருக்கும். இந்த அளவிற்கு, தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் என்பதே கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவு தேதி வெளியீடு., வெளியான முக்கிய தகவல்!!!

இதனால், மதரீதியில் தூண்டப்படும் நோக்கில் உள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு உச்ச நீதி மன்றத்திற்கு தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், கட்டாய மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கூறுவது அரசியலமைப்பு பிரிவு 25 ல் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது. இந்த கட்டாய மதமாற்ற சட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கொண்டு வந்ததுடன், அதனை ஒரு சில மாதங்களிலேயே திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here