பெகாசஸ் விவகாரம் – மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்!!

0

பெகாசஸ் விவகாரம் பற்றிய விரிவான பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இஸ்ரேலை சேர்ந்த தனியார் NSO நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டதாகவும், இந்தியாவில் மட்டும் 300 பேர் உளவு பார்க்கப்பட்டதாகவும் பிரபல ஆங்கில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக செயற்பட்டாளர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், தேர்தல் ஆணைய முன்னாள் அதிகாரி என பலரின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனால் மத்திய அரசின் மேல் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் மத்திய அரசு இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என உச்ச நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அளிக்கப்பட்ட மனுக்கள் மீது விரிவான பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here