பலா பழத்தின் கொட்டை மிஞ்சிருச்சா இதோ அத வச்சு செய்யலாம் சூப்பரான அவியல்… நீங்களும் ட்ரை பண்ணி தான் பாருங்களேன்!!!

0

பழங்கள் என்றாலே சத்துக்கள் நிறைந்தவை தான். அதிலும் முக்கனிகள் என்று கூறப்படும் மா,பால மற்றும் வாழை பழங்களில் எக்கசக்க சத்துக்கள் நிறைந்து உள்ளது. பலாப்பழத்தை பொறுத்தவரை அதை எந்தவிதத்தில் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் அதில் அவ்வளவு சத்துக்கள் அடங்கி உள்ளன. இது உடல் சூட்டை தணிக்கும், சிறுநீரக தொற்று, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்த கூடிய ஒன்று. இந்நிலையில் இந்த பழத்தை மட்டுமே அனைவரும் ரசித்து ருசித்து சாப்பிட்டு அதன் கொட்டைகளை தூக்கி எறிந்திருப்போம். இனி அவ்வாறு செய்ய வேண்டாம். அதை வைத்து ஒரு சூப்பரான அவியலை கீழே குறிப்பிட்டு உள்ள முறைப்படி செய்து அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்

மிஞ்சிய பலா பழத்தின் கொட்டைகள் – 15

தேங்காய் துருவல் – 1 கப்

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் – 2

சீரகம் – 1 தேக்கரண்டி

பூண்டு – 1

மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

முதலில் தேங்காய் துருவல், மஞ்சள் தூள்,பூண்டு, சீரகம், மிளகாய் வற்றல் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் பலாப்பழத்தின் கொட்டைகளை நன்கு கழுவி விட்டு அதை அடுப்பில் ஒரு கடாய் வைத்து தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேக விட வேண்டும். குலையாமல் கொட்டைகளை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதன் தோலை  நீக்கி நீளவாக்கில் இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதையடுத்து அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு போடவும்.

அதன் பின்னர் வேகவைத்த பலாப்பழத்தின் கொட்டைகள் மற்றும் உப்பு  சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்து வைத்த கலவையை சேர்த்து சிறிதளவு  தண்ணீர் ஊற்றி கொள்ளவும். அரைத்த கலவையின் பச்சை வாடை நீங்கிய பின்னர் சிறிதளவு மிளகு தூள் சேர்த்து தண்ணீர் வற்றி அவியல் பதத்திற்கு வந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கி விடவும். தற்போது சுவையா சக்கை கொட்டை அவியல் ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here